ஆலய வழிபாடுகளில் கலந்து கொண்டு ஐந்து கோடி ரூபா பணத்தை மோசடி செய்த 71 வயதுடைய பெண்ணொருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் கடவட பிரதேசத்தில் தனக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர்களிடம் கொடுப்பதாக கூறி பிக்குவிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள குறித்த பெண் களனி கொனவல, செலுவில பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டுள்ளார்.
அத்துடன் அவர், கடவட மற்றும் கணேமுல்ல ஆகிய இடங்களில் அமைந்துள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர் எனவும் கூறப்படுகின்றது.
அதேவேளை பெண்னிடம் , 470 இலட்சம் ரூபா பணத்தை இழந்த பிக்குவும் பல்கலைக்கழக விரிவுரையாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.