மீண்டும் ஒருபோதும் பொதுஜன பெரமுனவுடனோ அல்லது ராஜபக்ச குடும்பத்துடனோ அரசியலில் ஈடுபடப் போவதில்லை என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இணைய சேனலுடன் விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு முதல், ராஜபக்ச குடும்ப அரசியலில் தனக்கு கடுமையான விரக்தி இருந்ததாகவும், ஆனால் கட்சி உறுப்பினர்களின் அழுத்தத்தால் தான் ராஜபக்ஷ குழுவில் இருக்க நேர்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் கையாள்வது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ளார்.



















