கொழும்பு துறைமுகத்தை நோக்கி பிரான்ஸ் கப்பல் நிறுவனமான Compagnie du Ponant நிறுவனத்தினால் இயக்கப்படும் le champlain பயணிகள் சொகுசு கப்பல் வந்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் 18 அன்று குறித்த கப்பல் 264 பயனிகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
இந்த கப்பல் அதன் பிறகு கொழும்பில் இருந்து இந்தியாவின் மும்பையை சென்றடையவுள்ளது.
குறித்த சொகுசு கப்பலில் balcony கொண்ட அறைகள், 3 முதல் 6 வரையிலான அடுக்குகளில் அமைந்துள்ளன.
இரண்டு உணவகங்கள் மற்றும் இரண்டு ஓய்வறைகள், அத்துடன் ஒரு திரையரங்கம் ஆகியவையும் “Blue Eye“ என்று அழைக்கப்படும் நீருக்கடியில் ஓய்வறையும் காணப்படுகின்றது.
இது பயணிகள் நீருக்கடியில் காணப்படுகின்ற அழகை ரசிக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதேடு குறித்த கப்பலில் நீருக்கடியில் காணப்படுகின்ற ஓய்வறையானது பிரான்ச் கட்டிடக்கலைஞர் ஜாக் ரூகெரியினால் வடிவமைக்கப்பட்டள்ளது குறிப்பிடத்தக்கது.