அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்னையைப் பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஆறு மாதங்களின் பின்னர் குறித்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோருக்கான மண்ணெண்ணெய் நேற்று(10.12.2022) வழங்கப்பட்டுள்ளது.
போதியளவில் மண்ணெண்ணெய் இல்லை
குறித்த மண்ணெண்ணையை பெறுவதற்கு 500க்கும் மேற்பட்ட மக்கள் பல மணி நேரமாக காத்திருந்து மண்ணெண்ணெயைப் பெறவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
குடும்ப பங்கிட்டு அட்டையின் பிரகாரம் மண்ணெண்ணெய் வழங்கப்படுகின்றமையால் 3000 ரூபாய்க்கு மாத்திரமே மண்ணெண்ணை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விவசாய தேவைகளுக்கு மண்ணெண்ணெய் போதியளவில் இல்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.