கேகாலை பொது வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர் ஒருவர் (வார்ட்) 2,000 ரூபாவுக்கு 173 போதை மாத்திரைகளை விற்பனை செய்தபோது கைது செய்யப்பட்டதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (11) வைத்தியசாலை விடுதியில் வைத்து குறித்த உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கேகாலை பரகம்மன நாமல் உயன பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை கைதானவரின் மகனும் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



















