வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் அதிக குளிர் காரணமாக உயிரிழந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இதனை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஆய்வு செய்த குழு தமக்கு தொலைபேசியூடாக இந்த விடயத்தை அறிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த சில தினங்களில் மாத்திரம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுமார் ஆயிரத்து 200 கால்நடைகள் இறந்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.



















