இலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது.
இதற்கமைய, இந்த வாரம் 1700 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 71 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே, இலங்கை மக்களிடையே இந்த நாட்களில் இருமல், சளி, காய்ச்சல், உடல் வலி மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நோய் அறிகுறிகள் கடுமையாக தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறுமாறு சுகாதார பிரிவினர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
மேலும், இந்த நோய் அறிகுறிகள் தென்படும் சாதாரண நபராக இருந்தால், முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் பரசிட்டமோல் எடுத்துக்கொள்வது பொருத்தமானதாக இருக்குமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.