முல்லைத்தீவு காடுகளில் வாழும் அரியவகை மிருகங்களில் ஒன்றான பாரிய அழுங்கினை இறைச்சிக்காக பிடித்து சென்றவரை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் கைதுசெய்துள்ளனர்.
முல்லைத்தீவு துணுக்காய் தேராங்கண்டல் பகுதியில் இறைச்சிக்கு பயன்படுத்த இருந்த நிலையில் இருந்த ஆமடில்லா (அழுங்கு) விலங்கு கிளிநொச்சி மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
இரகசிய தகவல்
கிளிநொச்சி மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து சந்தேக நபர் ஒருவரின் வீட்டை சோதனை செய்த போது விலங்கு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கை செய்யப்பட்டுள்ள 40 வயதுடைய சந்தேக நபரை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.