தரம் மூன்றில் கல்வி பயிலும் தன் பிள்ளை தனக்கும் தன் குடும்பத்துக்கும் தொல்லை கொடுப்பதாக பொலிஸில் தாயார் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் ஒன்று தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
அவசர பிரிவுக்கு முறைப்பாடு
குழந்தையின் தாயார் போலிஸ் அவசர பிரிவுக்கு இது குறித்து முறைப்பாடு செய்த நிலையில் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இருவர் பதினைந்து கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் அவ் வீட்டிற்கு நள்ளிரவில் சென்றுள்ளனர்.
குறித்த வீட்டிலிருந்த பெண்ணிடம் புகார் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் விசாரித்தபோது குழந்தை உறங்குவதாக தாய் கூறியுள்ளார்.
அத்துடன் “தனது குழந்தை மூன்றாம் ஆண்டு படித்து வருவதாகவும் இரவு சீக்கிரம் தூங்கச் செல்லுமாறு கூறியும் தூங்காமல் பல்வேறு செயல்களில் ஈடுபடுவதாகவும், இந்நிலையில் குழந்தையை பயமுறுத்துவதற்காக தான் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் அப்பெண் பதிலளித்துள்லார்.
இதனையடுத்து தாயாரை கடுமையாக எச்சரித்து பொலிஸார் இனிமேல் இவ்வாறான செயல்களைச் செய்ய வேண்டாம் என கூறி சென்றதாகவும் தெரியவருகின்றது.