ஈழத்தில் புகழ்பூத்த சின்னமணி வில்லிசைக் குழுவின் பிரதான பக்கபாட்டு நகைச்சுவை மற்றும் நகைச்சுவை நாடக கலைஞர் அச்சுவேலியூர் அம்பிகாபதி விஜயநாதன் (அச்சுவேலி தபால் அலுவலக ஓய்வுநிலை உத்தியோகத்தர்) இயர்கை எய்தியுள்ளார்.
அச்சுவேலியில் உள்ள அவருடைய வீட்டில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அழிந்து வரும் தமிழர்களின் தொட்டுனர முடியாத மரபுரிமைகளினுள் ஒன்றான வில்லிசைக்கலையினை நிலைநிறுத்திய கலைஞர்களுள் சின்னகலைவானர் சின்னமனியுடன் இணைந்து விஜயநாதன், பல நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தார்.
ஈழத்திலும் புலம்பெயர் தேசத்திலும் பல அரங்குகள் மூலமாக மக்களின் மனம் கவர்ந்த கலைஞராகவும் நகைச்சுவையுடன் இணைந்து மக்களை மகிழ்வித்தவர் ஆவார்.
மேலும் கலைஞராகவும் நெறியாளர் ஆகவும் நாடகம் வில்லிசையென எண்ணிலடங்காத அரங்குகளில் விஜயநாதன் தனது கலைத்திறனை வெளிப்படுத்தி இருந்தார்.