யாழ்.பலாலி – அன்ரனிபுரம் கிராமத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்றிருந்த 54 வயதான 4 பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த ஞாயிற்றுகிழமை (18) பலாலியிலிருந்து தனியாக கடற்றொழிலுக்கு சென்ற இராயப்பு ரொபேட் கெனடி என்பவரே இவ்வாறு காணமல்போனாதாக தெரிவிக்கப்படுகிறது.
காணமல்போன கடற்றொழிலாளர் தொழிலுக்குச் சென்ற படகு கவிழ்ந்த நிலையில் அவரை தேடிச்சென்ற படகினால் கண்டுபிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.
மேலும் காணமல்போன கடற்றொழிலாளரை தேடும் பணி இடம்பெற்று வருவதுடன் குடும்பஸ்தர் காணாமல்போனமை தொடர்பில் இது பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.