முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இந்த தியர சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்ற நிலையில் சம்பவத்தில் செல்வகுமார் கோபிராஜ் (வயது-25) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
காதல் தோல்வி
குறித்த இளைஞர் காதல் தோல்வியால் தற்கொலை செய்துள்ளதாக உயிரிழந்த இளைஞனின் நண்பர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இதேவேளை யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் அண்மை நாட்களாக சிறுவர், சிறுமிகள் முதல் இளைஞர், யுவதிகள் என தவறான முடிவெடுத்துத் தங்களின் உயிர்களை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.
எத்தனையோ நெருக்கடிகளுக்கு மத்தியில் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை வளர்த்துவரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.