ஜனாதிபதி ஆலோசகர் பேராசிரியர் ஆஷீ மாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளநிலையில் அவர் நாயை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக பகீர் குற்றச்சாடு சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் புகைப்படங்களை காண்பித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான ஹிருணிகா பிறேமச்சந்திர அதற்கு ஜனாதிபதி எடுத்த நடவடிக்கை என்ன? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊடக சந்திப்பு
நேற்று கொழும்பில் நேற்று ஊடகங்களை சந்தித்த ஹிருணிகா பிறேமச்சந்திர கூறுகையில்,
ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் தொடர்பாக இப்படி ஒரு ஊடக சந்திப்பில் பேசும் நிலையேற்படும் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை. இப்படியான ஒரு கதையை உலகில் எங்கேயும் கேட்டிருக்க முடியாது.
பேராசிரியர் ஆஷி மாரசிங்க செல்ல பிராணியான சிறிய நாய் குட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை ஊடகங்களுக்கு தருகிறேன் என கூறியதுடன், அவரே ஒரு புகைப்படத்தை துாக்கி காண்பித்தார்.
மேலும் தமது பாலியல் தேவைகளை விலங்குகள் மூலம் தீர்த்துக் கொள்வது ஒரு மனநோய் என தெரிவித்த ஹிருணிகா, அவ்வாறான ஒரு நடவடிக்கை எமது நாட்டு சட்டத்தின்படி 20 வருடங்கள் சிறைத்தண்டணை வழங்ககூடிய குற்றம் என்றும் கூறினார்.