பேராதனை பல்கலைக்கழக மாணவர் தலைவர்கள் இருவரை உடனடியாக பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.
அதன்படி பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தற்போதைய தலைவர் மற்றும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட அதன் முன்னாள் தலைவர் ஆகியோரையே இவ்வாறு பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
விடுதியில் தங்குவதற்கும் அனுதியில்லை
அத்துடன் குறித்த இரண்டு மாணவர்களும் பல்கலைக்கழக விடுதியில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.
இருவரும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு அதிகாரிகளிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இரண்டு மாணவர்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, முன்னாள் உபவேந்தரை தாக்கிய குற்றச்சாட்டில் கைதான 12 மாணவர்களையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.