60 வருடங்களை பூர்த்தி செய்யும் அரச ஊழியர்கள் நாளையுடன் வீட் செல்லவுள்ள நிலையில் , அரச சேவையை சீரான முறையில் நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
கட்டாய ஓய்வு
60 வருடங்களை பூர்த்தி செய்யும் அரச ஊழியர்களின் ஓய்வு காலத்தை கருத்திற் கொண்டு அரச சேவையை சீரான முறையில் பேணுவதற்கான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.
அதன்படி, ஏராளமான அரசு ஊழியர்கள் நாளை (31) ஓய்வு பெற உள்ளதால், காலி பணியிடங்களை ஆய்வு செய்து, அது தொடர்பான பரிந்துரைகளை வழங்கும் பொறுப்பு குறித்த குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் மட்டுப்படுத்தப்பட்ட புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அந்த ஆட்சேர்ப்புகளுக்கான பரிந்துரைகளை உரிய குழு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளித்ததன் பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.