தலதா மாளிகை குறித்து அவமதிப்பு கருத்துக் வெளியிட்டதாக கூறப்படும், சமூக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொரளஞ்கமுவ பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தலதாமாளிகை மற்றும் பௌத்தம் தொடர்பில் அவமதிப்பு கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படும், சேபால் அமரசிங்க என்பவருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த உள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.