பிரித்தானியாவில் சில இடங்களில் மழைப் பெய்துள்ள நிலையில், வேல்ஸ் மற்றும் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்தைச் சுற்றிலும், ஆறு வெள்ள அபாய எச்சரிக்கைகளை ஸ்காட்டிஷ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் இங்கிலாந்தின் பலப் பகுதிகளில் 20-30 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மக்கள் வெளியில் செல்லும்போது அவதானமாக இருக்குமாறு மெட் ஒப்பீஸ் அறிவுறுத்தியுள்ளது.