ஜெர்மனி நாட்டில் தமிழ் இளைஞன் ஒருவரால் இலங்கையில் வாழும் பெண்கள் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
28 வயதுடைய தமிழ் இளைஞனால் பெண்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இலங்கையில் வாழும் தமிழ் பெண்களை இந்த நபர் தொடர்புக் கொண்டு ஏமாற்றுவதாக தெரியவந்துள்ளது.
அவர்களை திருமணம் செய்தாகவும் காதலிப்பதாகவும் கூறி ஏமாற்றி அவர்களை இந்தியாவுக்கு வரவழைக்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நபரால் பல அப்பாவி பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அவ்வாறான நபர் தொடர்புக் கொண்டால் ஏமாற வேண்டாம் என ஏமாற்றப்பட்ட பெண் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பல பெயர்களை பயன்படுத்தி பெண்களுடன் தொடர்புக் கொண்டு அவர்களிடம் தவறாக செயற்பட முயற்சித்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அந்த நபர் வழங்கும் வாக்குறுதிகள் அனைத்தும் போலியானதெனவும் அதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என பெண்களிடம் பாதிக்கப்பட்ட பெண் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜெர்மனியில் இருந்து பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் ஊடாகவே பெண்களை இந்த நபர் தொடர்புக் கொள்வதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த நபரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவம் அவர்களில் பலர் இந்த நபரை தேடி இந்தியா சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.