வெளிநாடுகளுக்கு செல்லும் அல்லது ஓய்வுபெறும் வைத்தியர்களின் துல்லியமான தரவுகளைப் பெறுவதற்கு புதிய நடைமுறையொன்று உடனடியாக கொண்டுவரப்படும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சரியான தகவல்கள் கிடைக்காமை பாரதூரமான பிரச்சினையாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட சமூக வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி வின்யா ஆரியரத்ன வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை மருத்துவ சங்கத்தின் தேர்தல்
இலங்கை மருத்துவ சங்கத்தின் தேர்தல் நேற்று இடம்பெற்றதுடன், சங்கத்தின் 129வது தலைவராக வைத்திய கலாநிதி வின்யா ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வின்யா ஆரியரத்ன, அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டண செலுத்தும் வோட் முறையை ஆரம்பிக்கும் யோசனையை தமது சங்கம் எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.