இளைஞன் ஒருவர் பொல்லு ஒன்றினால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் கொட்டவெஹெர கெலேகம பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
சம்பவம்
குறித்த இளைஞன் கடந்த 16ஆம் திகதி இரவு உறங்கிக் கொண்டிருந்த போது தாத்தாவினால் தாக்கப்பட்டதோடு சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் நவோத் தில்ஷான் என்ற 18 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன் சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொட்டவெஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.