க.பொ.த உயர்தரப் பரீட்சை இடம்பெறும் 14 நாட்களுக்கு மின்தடை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் (17.01.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
காரணம்
க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் 14 நாட்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி நாடு பூராகவும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக, பந்துல குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பரீட்சை எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக நாளொன்றிற்கு 357 மில்லியன் ரூபா வீதம் தொடர்ச்சியாக 14 நாட்கள் மின்சாரம் வழங்குவதற்கு 5 பில்லியன் ரூபா செலவாகும் என கஞ்சன விஜேசேகர தெரிவித்ததாகவும் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.