வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிராந்தியத்திற்கு மேலாக தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதுடன், நாளை மறுதினம் மேலும் தீவிரமடைந்து வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் நிலைகொள்ளும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் குறித்த பகுதிகளுக்கு எதிர்வரும் 24 மணித்தியாலயங்களுக்கு கடற்றொழிலாளர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.