ஒரு லீட்டர் பாலின் விலையை இருபது ரூபாய் உயர்த்த மில்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பால் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் தற்போதைய பால் லீட்டர் ஒன்றின் விலை 140 ரூபாவாகும், இது 160 ரூபாவாக அதிகரிக்கப்படும் என அதன் தலைவர் ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார்.
தனியார் துறையினர் ஒரு லீட்டர் திரவப் பாலை 160 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர் அதே நேரத்தில் சந்தையில் 450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.