இரத்தோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்தப் பணிகள் காரணமாக இன்று (13) மூன்று பகுதிகளில் 10 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இரத்தோட்டை கைகாவல மற்றும் வெரகம ஆகிய பகுதிகளுக்கு இன்று திங்கட்கிழமை (13) இரவு 8 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை (14) காலை 6 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.