பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குளிப்பதை வீடியோ பதிவு செய்த ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் கடமைகளில் இருந்தும் அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கல்கிசைப் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையமொன்றில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரே பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் பேரில் குறித்த ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உயர் அதிகாரியிடம் முறைப்பாடு
இச் சம்பவம் கடந்த 15 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், தன்னை வீடியோ எடுப்பதை உணர்ந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் சம்பவம் குறித்து தனது மேல் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.
இதையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன் , அவரது கையடக்கத் தொலைபேசியில் இருந்து பெண் கான்ஸ்டபிள் குளிக்கும் பல காணொளிகள் மீட்கப்பட்டுள்ளன.
பெண் பொலிஸாரின் விடுதியில் உள்ள குளியலறையில் பெண் கான்ஸ்டபிள் குளித்துக்கொண்டிருந்த போது கான்ஸ்டபிள் கையடக்கத்தொலைபேசியை பயன்படுத்தி வீடியோ பதிவு செய்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.