இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்கும் திறன் கொண்ட மூன்று தனியார் நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பித்து அனுமதி பெறவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
ஏறக்குறைய 10 தனியார் நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதிக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேசமயம் , விண்ணப்பங்களை ஆய்வு செய்த சிறப்புக் குழு மூன்று நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்ததாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.



















