குவைத்தில் சுமார் 4 வருடங்களாக வீடொன்றில் பணிப்பெண்ணாக இருந்த இலங்கை பெண் ஒருவர் உடல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குவைத்தில் வீட்டின் உரிமையாளரும் மற்றும் அவரது இரண்டு மகன்களால், உடல் மற்றும் தலையில் தாக்கப்பட்டதால் தான் பலத்த காயங்களுக்கு ஆளாகியிருப்பதாக குறித்த இலங்கை பெண் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வீட்டின் உரிமையாளர்கள் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை தன்னை அடித்து துன்புறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டி தாக்குதலுக்குள்ளானதை எந்த வகையிலும் காவல்துறையினரிடம் சொல்ல வேண்டாம் என்று கூறியதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.
பின்னர் வாகனத்தில் ஏற்றிச்சென்று ஓரிடத்தில் தன்னை கைவிட்டுச் சென்றதாகவும் தாக்குதலுக்கு உள்ளான பெண் கூறியுள்ளார். இதன்போது குறித்த பெண்ணின் இலங்கை நண்பர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகமோ அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறித்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.