உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு மேலும் சுமார் 6000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதோடு விடைத்தாள் மதிப்பீட்டு கடமைகளுக்காக இதுவரை 13,000 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக கால அவகாசம்
எனினும் மதிப்பீட்டுப் பணிகளுக்காக சுமார் 19,000 ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும் முக்கியமாக விஞ்ஞானப் பிரிவுக்கு ஆசிரியர்கள் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.