போதைக்கு அடிமையான நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவை சேர்ந்த நபரின் பிள்ளைகள் கடந்த வருடம் 5ஆம் மாதம் கடலுக்குள் மூழ்கி உயிரிழந்தனர்.
அன்று தொடக்கம் மன விரக்தியில் இருந்த அவர் குடிபோதைக்கு அடிமையாகி உள்ளார்.
இதையடுத்து கடந்த மாதம் 12ஆம் திகதி திடீர் சுகயீனம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இவ்வாறு நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.