கச்சதீவில் அரச மரங்கள் நடப்பட்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரித்திருந்தார்.
நேற்றைய தினம் (23-03-2023) நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே இதை அவர் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சில உள்ளூர் பத்திரிகைகளும் இந்த பௌத்தமயமாக்கல் விவகாரத்தை இன்றைய தினம் (24-03-2023) அம்பலப்படுத்தியுள்ளன.