இந்த வருடம் ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற விரும்பும் விண்ணப்பதாரிகள் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்கள இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் பதிவுக்கட்டணம் ரூபாய் 25,000 இலங்கை வங்கி கணக்கிலக்கம் 2327593 (Hajj Account) வைப்பு செய்து, வங்கியின் பற்றுச்சீட்டின் மூலப்பிரதியை திணைக்களத்திற்கு நேரடியாக வருகை தந்து சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொண்டு, ஹஜ் பயணத்தை உடனடியாக உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3500 யாத்திரிகளுக்கு அனுமதி
மேலும் ஹஜ் யாத்திரிகர்கள் தெரிவு பற்றுச்சீட்டின் இலக்க முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
சவூதி அரசாங்கம் இவ்வருடம் இலங்கையிலிருந்து 3,500 யாத்திரிகளுக்கு புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
2019 ஆம் ஆண்டிலிருந்து புனித ஹஜ் கடமையினை மேற்கொள்வதற்காக ஏற்கனவே திணைக்களத்தில் 25,000 ரூபா பதிவுக் கட்டணத்தை செலுத்தி உறுதி செய்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு ஹஜ் குழுவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் தீர்மானித்துள்ளன.