அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளிலும், பிரதான வீதியோரங்களிலும் வெள்ளரிப்பழ விற்பனை அதிகரித்துள்ளது.
குறிப்பாக சம்மாந்துறை – அம்பாறை பிரதான வீதி, கல்முனை- அக்கரைப்பற்று , பிரதான வீதியோரங்களில் துவிச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் ஆர்வத்துடன் வெள்ளரிப்பழத்தினை கொள்வனவு செய்வதில் ஈடுபடுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம்
இம் மாவட்டத்தில் தற்போது நிலவி வருகின்ற வரட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள உடல் சூட்டை தவிர்ப்பதற்காக இவ்வெள்ளரிப்பழம் உட்பட ஏனைய பழ வகைகளை சாப்பிடுவதில் மக்கள் அதிக நாட்டம் கொண்டு வருகின்றனர்.
இது தவிர தற்போது அதிக வெப்பம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழத்திற்க்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன் 150 ரூபாய் முதல் சுமார் 850 ரூபாய் வரை இவ் வெள்ளரிப்பழம் சிறியது முதல் பெரியது வரையான பருமனுக்கேற்ப விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளரிப்பழ விற்பனை
பனைஓலையில் மிக பாதுகாப்பாக வெள்ளரிப்பழத்தை கட்டி விற்பனையாளர்கள் விற்பனை செய்து வருகின்றதுடன் குறித்த வெள்ளரிப்பழங்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.