அம்பாறை- பெரியநீலாவணை தொடர் மாடி வீட்டு திட்ட பகுதியில் கேரளா கஞ்சா வைத்திருந்த 35 வயதுடைய நபரொருவர் பெரியநீலாவணை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பொலிஸாருக்கு இரகசிய தகவல்
பெரியநீலாவணை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேக நபரை கைது செய்த போது அவரிடமிருந்து 860 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 35 வயதுடைய இளைஞர் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கம் மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



















