கணவன் மனைவியை எரித்து கொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் வெல்லம்பிட்டியவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப தகராறின் காரணமாக கணவன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டு பின்னர் மனைவியை கட்டிப்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இத் தம்பதியினர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த மனைவி நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24ஆம் திகதி போர்டிலா பாடசாலைக்கு அருகில் இருவருக்குமிடையில் இந்த தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் 44 வயதுடைய பெண் எனவும் சிகிச்சை பெற்று வந்த 54 வயதுடைய கணவர் வெல்லம்பிட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.