இலங்கையில் 31,382,000 கையடக்க தொலைபேசிகளை மக்கள் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
இலங்கையில் 2 கோடி 21 லட்சத்து 81 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
மத்திய வங்கியின் அறிக்கை
2022 ஆண்டு இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கமைய, 100 பேர் பயன்படுத்தும் நிலையான தொலைபேசிகளின் எண்ணிக்கை 12 ஆகும். இதன் மொத்த எண்ணிக்கை சுமார் 2,652,000 ஆகும்.
கையடக்க தொலைபேசிகள் உட்பட 100 பேர் பயன்படுத்தும் தொலைபேசிகள் எண்ணிக்கை 142 ஆகும். நூறுக்கு 97.7 பேர் இணைய சேவையை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு டிஜிட்டல் தர வாழ்க்கைச் சுட்டெண்ணிற்கமைய, இலங்கை 117 நாடுகளில் 89 வது இடத்தைப் பிடித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.