யாழ்.வல்லை முனியப்பர் ஆலய வளாகத்தில் ஆண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது இன்று (02.05.2023)இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
பலாலியை சேர்ந்தவரும் தற்போது அச்சுவேலி பத்தமேனி பகுதியில் வசித்து வருபவருமான வசந்தகுமார் ஸ்ரீகாந்த் (வயது 36) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் பழக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருவதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை சடலம் காணப்படும் நிலை சந்தேகத்திற்கு இடமான முறையில் உள்ளமையால் இது கொலையா? தற்கொலையா? என பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் பின்னர் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.