அமெரிக்காவில் திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மணமகள் மற்றும் மணமகன் காரில் சென்ற நிலையில் கார் விபத்துக்குள்ளாகி மணமகள் சம்பவ இடத்திலேயே பலியானமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் இந்த துயர சம்பவம் பதிவாகியுள்ளது. திருமணம் முடிந்த பின்னர் மணப்பெண் மற்றும் மணமகள் கடற்கரை சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர்.
போதையில் வந்த பெண்ணால் விபத்து
அப்போது எதிரே வந்த வாகனம் மணமக்கள் சென்ற வாகனத்துடன் மோதிய நிலையில் புதுமணத் தம்பதிகள் பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே மணமகள் பலியானதுடன் மணமகனுக்கு படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
25 வயது இளம்பெண் ஒருவர் குடிபோதையில் வேகமாக காரை ஓட்டி வந்த நிலையில் அந்த கார் மணமக்களின் வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.