அமெரிக்க வழங்கும் கிறீன் காட் லொட்டரியில் கிழக்கு மாகாணம் அப்பாறையை சேர்ந்த 6 தமிழர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதுவரை அப்பாறை – காரைதீவில் இருந்து அமெரிக்க Green Card சீட்டிலுப்பில் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
அம்பாறையில் ஐவர் தெரிவு
அந்தவகையில் தினேக்ஷ்- சகாயநாதன், தர்க்ஷிகா- ராசன், பிரசாந் – கிக்ஷானிகா, தன்ராஜ்- சண்முகநாதன், திலீப்குமார் – சரணியா ஆகியோரே அமெரிக்க Green Card சீட்டிலுப்பில் தெரிவு செய்யப்பட்ட அதிக்ஷ்டசாலிகள் ஆவார்கள்.
அமெரிக்க Green Card இன்றைய காலகட்டத்தில் பலரின் கனவாக உள்ளது. கடந்த காலங்களிலும் கூட அமெரிக்க Green Card லொட்டரியில் வென்று பல அங்கு சென்று வசித்து வருகின்றனர்.
உள்நாட்டு போரினாலும் , நாட்டின் பொருளாதார நெருக்கடியாலும் சிக்கித்தவித்துவரும் இலங்கை தமிழர்களுக்கு அமெரிக்க Green Card லொட்டரி பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
பலகோடிகள் கொடுத்து சட்டவிரோதமாக ஐரோப்பிய மற்றும் கனடா விற்கு இலங்கையர்கள் உயிராபத்தான பயணங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் அமெரிக்க Green Card லொட்டரி மக்களுக்கு பெரும் அதிஸ்டம் என்றே கூறவேண்டும்.