சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று நாளை இலங்கை வரவுள்ளது.
கொழும்பில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அலுவலகம், இந்தாண்டின் பிற்பகுதியில் திட்டமிடப்பட்ட முதல் மறுஆய்வு பணிக்கு முன்னதாக வழக்கமான ஆலோசனைகளின் ஒரு பகுதியாக IMF ஊழியர்கள் குழு மே 11 முதல் 23 ஆம் திகதி வரை இலங்கையில் இருப்பார்கள்.
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசனும் இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக பங்கேற்கவுள்ளார்.