மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமானதும் அபாயகரமானதுமான மணல் அகழ்வுகள் இடம்பெற்றமைக்கான விரிவான சாட்சியங்களைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் அகழ்விற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதையும் புதுப்பிப்பதையும் உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளது.
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு, ஜனாதிபதியின் அலுவலகத்தின் இந்த உத்தரவு அனுப்பபப்பட்டுள்ளது.
சட்டவிரோத மணல் அகழ்வு
சட்டவிரோத மணல் அகழ்வு நடத்த உரிமத் திட்டம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து அறிக்கைகள் கிடைத்துள்ளன.
இந்தநிலையில் மாவட்டத்தில் நீர்வழிப்பாதைகளுக்கு அருகில் உள்ள பெரும்பாலான உணர்திறன் வாய்ந்த பகுதிகள் சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்களால் பெரிதும் அழிக்கப்பட்டுவிட்டன.
அத்துடன் சட்டவிரோத மணல் கடத்தலால் கிராமப்புற சாலைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதையும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் ஏற்றுக்கொண்டுள்ளது.