ஹம்பாந்தோட்டையில் நோயாளர் காவு வண்டி சாரதி ஒருவர் கூறிய ஆயுத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டை கட்டுவெவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் அச் சாரதி திஸ்ஸமஹராமா கங்காசிறிபுர தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் தெரிய வந்த விடயம்
குறித்த நபர் நேற்று (20) பிற்பகல் தனது வீட்டில் பெண் ஒருவருடன் இருந்த போது குறித்த பெண்ணின் கணவர் அவ்விடத்திற்கு வந்து கூறிய ஆயுத்தால் சாரதியை தாக்கியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான சாரதி ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் பணிபுரிவதாகவும் அப் பெண் அதே வைத்தியசாலையில் தூய்மை பணியாளராக கடமையாற்றுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சாரதியை தாக்கிய அந் நபரை ஹம்பாந்தோட்டை தலைமையக பொலிஸார் கைது செய்ததுடன் இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளதாகவுகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.