சமீபகாலமாக பல திரையுலகில் அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட காமெடி நடிகர் மனோபாலாவின் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
1981 -ம் ஆண்டு வெளிவந்த ராணுவ வீரன் படத்தில் ரஜினிகாந்திற்கு அம்மாவாக நடிகை வி.வசந்தா நடித்திருப்பார். இவர் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படத்தில் நடித்துள்ளார்.
நடிகை வி.வசந்தாவுக்கு வயது மூப்பு காரணமா சமீபத்தில் உடல்நிலை மோசமாக இருந்துள்ளது. இதனால் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். நேற்று மே 19-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறுதி சடங்கு இன்று மதியம் 1.30 மணியளவில் நடைபெறவுள்ளது.