இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடந்கவிருந்த நிலையில் கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் வவுனியாவைச் சேர்ந்த இளம் பெண் தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பெண் அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் உள்ள பெற்றோருக்கு சொந்தமான வீட்டில் அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்டதாக தெரியவருகின்றது.
இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த பெண்ணை அப் பகுதியல் உள்ளவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள்.
சிகிச்சைகளின் பின் உயிர் பிழைத்த குறித்த பெண் 5 மாத கர்ப்பிணியாக்கியக உள்ளதாக வைத்தியர்கள் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் எந்த சூழலில் தனது மகள் கற்பமடைந்திருப்பதாக பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதன் பின்னர் பெற்றோர் மகளிடம் மேற்கொண்ட விசாரணையில் லண்டனிலிருந்து இலங்கை வந்து அவர்களின் வீட்டில் 2 வாரங்கள் தங்கிநின்ற அக்காவின் கணவரே காரணம் என தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட குறித்த யுவதிக்கும் லண்டனில் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவனுடன் நிச்சயதார்த்தம் முடிவடைந்து ஒரு மாதத்தில் திருமணம் நடக்கவிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதற்கான ஆயத்தங்கள் மற்றும் மண்டப ஒழுங்குகள் என்பவற்றுடன் திருமண அழைப்பிதழ்களும் அச்சிடப்பட்டு வழங்கப்படவிருந்த நேரத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த யுவதி கொழும்பில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் ஆசிரியை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைக் காலமாக வெளிநாட்டில் இருந்து செல்கின்ற உறவினர்கள் பலரால் இப்படியான முகம் சுழிக்கும் சம்பவம் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கத.