கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை நாளை இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையே நாளை நடைபெறவுள்ளது.
ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பரீட்சையில் 4, 72,553 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
பாடசாலை மூலம் 3,94,450 பேர் தோற்றவுள்ளனர். நாடளாவிய ரீதியில் உள்ள 3,568 பரீட்சை மத்திய நிலையங்களுக்குமான வினாத்தாள்கள் விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பமாகியது. பரீட்சைக்காக 40 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.



















