வவுனியா, புளியங்குளம் – மதியாமடு பகுதியில் 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் புதன்கிழமை (31) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புளியங்குளம் – மதியாமடு பகுதியில் வசித்து வந்த கெ.சதீஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இதன்போது செவ்வாய்க்கிழமை (30) இரவு தனது தோட்டத்திற்கு சென்ற குறித்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் தூக்கில் தொங்குவதை அவதானித்த பொது மகனொருவர் புளியங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டதுடன், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.
மேலும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையே தற்கொலைக்கு காரணமாக இருக்கலாமென ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.