நாடாளுமன்ற பொது நிதிக்குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற நிதிக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று கூடியபோதே ஹர்க்ஷவுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
நிதிக் குழு உறுப்பினர்கள் ஏகமனதாக ஆதரவு
இதன்போது நாடாளுமன்ற பொது நிதிக்குழுவின் தலைவர் பதவிக்கு கலாநிதி ஹர்டி டி சில்வாவின் பெயரை ஜனாதிபதி முன்மொழிந்த நிலையில் அதற்கு நிதி குழு உறுப்பினர்கள் ஏகமனதாக ஆதரவு வழங்கியுள்ளது.
அதேவேளை நாடாளுமன்ற நிதிக்குழு நியமிக்கப்பட்டிருந்தாலும் அந்த குழுவுக்கு தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. அதன் தலைவர் பதவி தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்டிருந்தது.
அதேசமயம் ஆரம்பத்தில் மயந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்ட பின்னர் அவர் பதவி விலகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.