ருமேனியாவுக்கு தொழில்வாய்ப்புக்காக செல்வோரின் விசா நடைமுறையில் நிலவும் சிக்கல்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ருமேனியாவின் இராஜாங்க செயலாளரும் வெளிவிவகார அமைச்சின் பிரதியமைச்சருமான ட்ரேயன் ஹிரிஸ்டியா சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார்.
இதன்போது இலங்கையர்களுக்கு ருமேனியாவில் தொழில்வாய்ப்புக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமைக்கு சபாநாயகர் நன்றி தெரிவித்ததாக, நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.



















