மன்னாரில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 92 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார், இலுப்புக்கடவாய் தடாகத்திலே இத் தேடுதல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான SLNS புவனேகா மற்றும் SLNS கஜபா ஆகிய படைகள் இணைந்தே விசேட நடவடிக்கையில் இடம் பெற்றுள்ளனர்.
சந்தேகத்திற்குரிய வகையில் மூன்று சாக்குகள் அருகில் உள்ள புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி சுமார் 92 கிலோ 250 கிராம் எடையுள்ள 42 கஞ்சா மூடைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு சுமார் 30 மில்லியன் ரூபாவாகும்.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை போதைப்பொருள் கடற்படையின் காவலில் வைக்கப்பட்டுள்ளது.