உடம்பில் பச்சைக்குத்திய நபர்களிடம் இருந்து ஒரு வருட காலத்திற்குள் குருதி பெற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தேசிய குருதி மாற்று மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பச்சைக் குத்துதல் மற்றும், ஊசி ஏற்றல் முதலான செயற்பாடுகள் மூலம் எயிட்ஸ் உள்ளிட்ட 5 நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அதன் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
தெரிவித்த கருத்து
எனவே “பச்சைக் குத்திய காலத்தில் இருந்து ஒரு வருட காலத்திற்கு குறித்த நபர்களிடம் இருந்து குருதி பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
எவ்வாறிருப்பினும் அதற்கு பின்னரான காலப்பகுதியில் குருதியை பெற்றுக்கொள்வதில் எந்த பிரச்சினையும் காணப்படாது.
அதேநேரம் இந்த வருடத்தில் தேசிய குருதி வங்கிக்கு 4 இலட்சத்து 20 ஆயிரம் குருதி அலகுகள் தேவைப்படுகின்றன.
எனினும் தற்போது போதியளவு குருதி அலகுகள் கையிருப்பில் உள்ளது” என தேசிய குருதி மாற்று மத்திய நிலைத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.