திருகோணமலையில் தேன் எடுப்பதற்காக சென்றிருந்த மூவர் கரடி தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பம ஒன்று இடம் பெற்றுள்ளது.
கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனப்பகுதியிலேயே இச் சம்பம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளது.
கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மூவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோமரங்கடவல பக்மீகம பகுதியைச் சேர்ந்த 29, 38 மற்றும் 46 வயதுடைய மூவரே கரடி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.